Breaking News

இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் - ஜனாதிபதி

எங்­க­ளுக்கு உல­கத்தில் இன்று எதி­ரிகள் இல்லை.எதி­ராக செயற்­ப­டு­கின்­ற­வர்­களும் இல்லை. இந்­தியா, பாகிஸ்தான், இங்­கி­லாந்து, சீனா, ஜப்பான் என எல்­லோரும் எங்­க­ளுடன் இருக்­கின்­றார்கள். எனவே இந்த நாட்டை முன்­னோக்கி கொண்­டு ­செல்­வ­தற்கு இதுவே நல்ல சூழ­லாக அமைந்­துள்­ளது என ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

நேற்று கிளி­நொச்­சியில் இடம்­பெற்ற உணவு உற்­பத்தி தேசிய வேலைத்­திட்­டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் குறிப்­பி­டு­கையில்;உல­கத்தில் எல்­லோரும் எங்­க­ளுடன் நல்ல நட்­பாக உள்­ளனர். அவர்கள் எங்­க­ளோடு சேர்ந்து செயற்­ப­டு­கின்­றனர். எங்­க­ளுக்கு உல­கத்தில் இன்று எதி­ரிகள் இல்லை. எதி­ராக செயற்­ப­டு­கின்­ற­வர்­களும் இல்லை. இந்­தியா, பாகிஸ்தான், இங்­கி­லாந்து, சீனா, ஜப்பான் என எல்­லோரும் எங்­க­ளுடன் இருக்­கின்­றார்கள்.

எனவே இந்த நாட்டை முன்­னோக்கி கொண்­டு­செல்­வ­தற்கு இதுவே நல்ல சூழ­லாக அமைந்­துள்­ளது. இதுதான் சரி­யான யுகம். எனவே அர­சாங்­கத்தின் காலத்தில் சிறப்­பான நிலை­மையை  உரு­வாக்க வேண்டும்.

மேலும் எங்­க­ளுக்குள் எந்தப் பிரச்­சினை இருந்­தாலும் அதனை பேச்­சு­வார்த்தை மூலம் தீர்த்­துக்­கொள்ள முடியும். வடக்கு மாகாண முத­ல­மைச்சர் தனது உரையில் முக்­கி­ய­மான விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார்.என­வேதான் நாங்கள் அனை­வரும் ஆக்­க­பூர்­வ­மான பேச்சு வார்த்­தை­களை மேற்­கொண்டு எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தீர்த்­து­கொள்ள வேண்டும் என்­ப­தனை நான் கூறு­கின்றேன்.

இந்த நாட்டில் வாழ்­கின்ற எல்லா மக்­களும் ஒற்­று­மை­யாக சகோ­த­ரத்­து­வ­தோடு வாழ்­கின்ற சூழலை உரு­வாக்­கு­வ­துதான் எங்­க­ளு­டைய நோக்­க­மாகும்.எங்­க­ளு­டைய நாட்டின் அபி­வி­ருத்­திக்கு அனைத்து சர்­வ­தேச நாடு­களும் நிறு­வ­னங்­களும் தங்­க­ளு­டைய உத­வி­களை வழங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன.

வறு­மையை இலங்­கையில் இல்­லா­தொ­ழிக்கும் நோக்கில் பயி­ரி­டக்­கூ­டிய அனைத்து நிலங்­க­ளிலும் பயிர்­செய்கை மேற்­கொள்ள வேண்டும். அவ்­வாறு பயிர்­செய்­கைக்கு பயன்­ப­டுத்­தாது வெறு­மை­யாக உள்ள அரச மற்றும் தனியார் நிலங்கள் அர­சினால் மீளப்­பெ­றப்­பட்டு அவை உற்­பத்­தியில் ஈடுப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு வழங்க்­கப்­படும். எனவே இது­வரை காலமும் வெறு­மை­யாக வைத்­தி­ருந்த நிலங்­களை உற்­பத்­திக்கு பயன்­ப­டுத்த அனை­வரும் முன்­வர வேண்டும்.

இலங்­கையை பொறுத்­த­வரை எம்மால் உற்­பத்தி செய்யக் கூடிய பல பொருட்கள் வரு­டந்­தோறும் பல கோடி ரூபாக்கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்டு வரு­கின்­றன. ஏற்­று­மதி இறக்­கு­மதி துறையில் இலங்கை மிக மோச­மான நிலையில் இருக்­கி­றது. கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்­கையில் உற்­பத்தி செய்யக் கூடிய பல பொருட்கள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தற்­காக 6000 கோடி ரூபாக் செலவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு வரு­டந்­தோறும் பல கோடிக்­க­ணக்­கான ரூபாவை இறக்­கு­ம­திக்கு செலவு செய்தால் எங்­க­ளு­டைய விவ­சா­யிகள் எவ்­வாறு முன்­னேற்றம் அடை­வார்கள்? அவர்­களின் ஏழ்மை எவ்­வாறு இல்­லாது போகும்? எனவே எம்மால் உற்­பத்தி செய்யக் கூடிய பொருட்­களை இறக்­கு­மதி செய்­வ­தனை தவிர்த்து அதனை இங்­கேயே உற்­பத்தி செய்ய அனை­வரும் முன்­வர வேண்டும். அடுத்து வரும் ஆண்­டு­களில் இலங்­கையில் உற்­பத்தி செய்யக் கூடிய பொருட்கள் இறக்­கு­மதி செய்­வ­தனை தடை செய்ய இருக்­கின்றோம்.

இந்த உணவு உற்­பத்தி தேசிய வேலைத்­திட்­டத்தின் பிர­தான இலக்கு இந்த நாட்­டி­லி­ருந்து ஏழ்­மையை இல்­லா­தொ­ழிப்­ப­தாகும். இன்று இந்த வேலைத்­திட்டம் நாட்டில் உள்ள அனைத்து மாகா­ணங்­க­ளிலும் சம காலத்தில் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

இந்த தேசிய வேலைத்திட்டத்தை எல்லா மாகாண சபைகளையும் பொறுப்பெடுத்து செய்ற்படுத்துமாறு கோருகின்றேன். அத்தோடு இந்த தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை நாம் வடக்கில் அதுவும் கிளிநொச்சியில் ஆரம்பித்ததன் நோக்கம் வடக்கு விவசாயிகளுக்கு ஒரு கௌரவமாக இருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும் என்றார்.