Breaking News

ஜெனீவா தீர்மானத்தினால் படையினருக்கு பாதிப்பு கிடையாது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் இலங்கைக்கு எந்த வiகியலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனிப்பட்ட நபர்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுமே தவிர, ஒட்டுமொத்த படை மீதும் விசாரணை நடத்தப்படாது.

ஐக்கிய மக்கள் கூதந்திரக் கூட்டமைப்பின் சிலர் இது தொடர்பில் பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்து முழுக்க முழுக்க உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்று அமுல்படுத்தப்படும்.தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் சிலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.