Breaking News

கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நயவஞ்சகப் போக்கு - ஜேவிபி குற்றச்சாட்டு

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நயவஞ்சகப் போக்கைக் கைக்கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

தற்பொழுது சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உரிய முறையில் சட்டத்தை நிலைநாட்ட அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் 223 பேர் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தினர். இவர்களுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், இவர்கள் என்ன அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் இதுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடப்படாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.