தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இராணுவம் தடை : சுவாமிநாதன்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்திற்கு படையினர் பெரும் தடையாக உள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் 199ம் ஆண்டு விழாவிற்காக இன்று வியாழக்கிழமை யாழ்.வந்திருந்த அமைச்சர் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசியிருந்தார்.
தொடர்ந்து அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில் ‘வட-கிழக்கு மாகாணங்களில் மக்களுடைய காணிகளை விடுவித்து அங்கு மக்கள் மீள்குடியேறுவதற்கான வழி வகைகளை செய்யவேண்டும். என நாங்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்ற போதும். படையினர் அதற்கு தடையாக இருக்கின்றார்கள்.
ஆனாலும் இந்த விடயத்தில் நாங்கள் சரியானதை நிச்சயமாக செய்வோம். செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் 1 லட்சத்து 37 ஆயிரம் வீடுகளை மீள் குடியேறிய மற்றும் மீள்குடியேறவுள்ள மக்களுக்காக அமைக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.