ஐக்கிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாரிய போராட்டம் நடத்தத் திட்டம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாரிய போராட்டம் நடாத்தத் தீர்மானித்துள்ளன.
இலங்கையில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்காவும் இலங்கையும் நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு இந்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஜெனீவா தீர்மானத்திற்கும், அரசாங்கத்தின் அணுகுமுறைக்கும் எதிர்ப்பை வெளியிட்டு எதிர்க்கட்சிகள் இணைந்து கொழும்பில் பாரியளவில் எதிர்ப்பு போராட்டமொன்றை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வம் 14ம் திகதி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் அவர்களது கட்சி உறுப்பினர்களும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணி, மஹஜன எக்சத் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் போராட்டம் குறித்து அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தி, எதிர்வரும் 14ம் திகதி போராட்டம் நடாத்துவது என தீர்மானித்துள்ளனர்.
லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகளையும் இணைத்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.