நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் வைத்தியரை நியமிக்க கோரி உண்ணாவிரதம்
நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் வைத்தியரை நியமிக்க கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொது அமைப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில், கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக எமது நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்ற நிரந்தர வைத்தியர் ஒருவரையேனும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இவ்விடயம் சார்பாக பல்வேறு அரசியல் தலைமைகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்பதை மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம்.
எனவே இப்பிரச்சினையை வெளிக்கொண்டு வரும் முகமாக எதிர்வரும் 26.10.2015 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தொடக்கம் நண்பகல் 2.00 மணிவரை நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலை முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முடிவு செய்துள்ளோம்.
எனவே மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள், சமூக முற்போக்கு சக்திகள், கிராம அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் என அனைவரையும் அரசியல் வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு எமது கோரிக்கையை வென்றெடுப்பதற்கான இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்டு பங்களிப்பு செய்யுமாறு அன்புடன் கேட்டு நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.