Breaking News

ரவிராஜ் கொலைச் சந்தேக நபரான கடற்படைவீரர் சாட்சியாளராக மாறத் தீர்மானம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைச் சந்தேக நபர்களில் ஒருவரான கடற்படைவீரர் ஒருவர் சாட்சியாளராக்கப்படுவார் என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான ஆறு கடற்படை வீரர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.எதிர்வரும் 3ம் திகதி இந்த வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.