சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. சர்வதேச சிறுவர் தினம் உலகம்பூராகவும் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் தேசிய ரீதியான நிகழ்வு நடைபெறுகின்றது.
அந்த வகையில் மகளீர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார பிரதம விருந்தினராக் கலந்து கொண்டுள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக மகளீர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார்.
மேலும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளானவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.