தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டது - ரணில்
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு, இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளுடன் முறைசாரா கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்துதல் என்பன அரசியல் நோக்கங்களின் பிரதானமாக காணப்படுகின்றது.
எனினும், தேசிய ஒற்றுமை மற்றும் மத, இனப் பிரச்சினை தொடர்பாக விடயங்களுக்கு அரசியல் தீர்வுகளை தேடுவதே முக்கிய விடயமாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.