Breaking News

காணாமல் போனோர் தொடர்பில் மேலும் சாட்சிகள் விசாரணை

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து மேலும் சாட்சிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


ஐவர் அடங்கிய விஷேட விசாரணை குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார். 

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவினர் தற்போது கிளிநொச்சி பகுதியில் சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகள் குறித்து மாவட்ட மட்டத்தில் வாய்மொழி மூலம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. 

இதன்படி அந்த முறைப்பாடுகள் தொடர்பில் அந்தந்தப் பகுதிகளுக்கு சென்று மேலும் சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இந்த ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படவுள்ளதாக, மெக்ஸ்வெல் பரணகம மேலும் கூறியுள்ளார்.