Breaking News

முதல் துப்பாக்கி தாக்குதலை தொடக்கி வைத்தது ஒரு பௌத்த பிக்குவே – சிவமோகன்

முதல் துப்பாக்கி தாக்குதலை தொடக்கி வைத்தது ஒரு பௌத்த பிக்குவே என பாராளுமன்ற அமர்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பண்டா செல்வா ஒப்பந்தத்தை உருக்குலைப்பதற்காக முதல் துப்பாக்கி தாக்குதலை தொடக்கி வைத்தது ஒரு பௌத்த பிக்குவே.1956ம் ஆண்டு கல்லோயா தமிழர் குடியிருப்பின் மீது சிங்கள காடையர்களால் நடத்தப்பட்ட தக்குதலில் 50ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனா்.

1958, 1977, 1981, 1983 என இனப்படுகொலைகள் தொடர்ந்தது. இதன் விளைவே தமிழ் இளைஞர்கள் தமக்கான தனித்துவமான வாழ்வை நோக்கி ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்க வைத்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகள் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சுதந்திர தமிழீழ தாயக கோரிக்கையாக உருவெடுத்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.