போர்க்குற்றங்களை விசாரிக்க தனி மேல் நீதிமன்றம் – சட்டங்களை வரையும் பணி ஆரம்பம்
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, மேல் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான மேல் நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான சட்டங்களை வரையும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, இந்த சட்டங்கள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தனியான நீதிமன்றக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று, அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.