Breaking News

இலங்கை தொடர்பான ஐநா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று முன்னாள் நல்லிணக்க அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கடந்த தேர்தலில் ஆதரித்தவரும், அவரது அரசாங்கத்தில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அமைச்சு பொறுப்பை வகித்தவருமான வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னெடுப்பில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் விசாரணை அறிக்கையை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்டுள்ளது' என்றார் வாசுதேவ நாணயக்கார. இந்த ஒட்டுமொத்த செயற்பாடுகளும் அமெரிக்காவின் தேவையை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான். அந்த நடவடிக்கையின் விளைவாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தையும் நாங்கள் எதிர்க்கின்றோம் என்றார் முன்னாள் அமைச்சர் நாணயக்கார.

அடுத்த கட்டமாக சகல கட்சிகளையும் சர்வமதத் தலைவர்களையும் அழைத்து பேச்சு நடத்த இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். ஆனால், 'நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளிலேயே தாம் கலந்துகொள்ள முடியும் என்று வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.