மஹிந்தவிற்கு இப்போது பதுங்கு குழி இருந்தால் நல்லது – கயந்த கருணாதிலக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தற்போது பதுங்கு குழி இருந்தால் நல்லது என நினைக்கத் தோன்றியிருக்கும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தற்போது இருக்கும் நபர்களிடமீருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு பதுங்கு குழி இருந்தால் நல்லது என மஹிந்த நினைப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் சில ஜனாதிபதி மாளிகைகளில் நிர்மானிக்கப்பட்டுள்ளவை பதுங்கு குழிகளா அல்லது அதி சொகுசு நிலக் கீழ் மாளிகைகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது படையினர் மிகக் குறைந்த வசதிகளுடன் நிலத்திற்கு கீழ் பதுங்கு குழி அமைத்து யுத்தம் செய்ததனையே பார்த்துள்ளதாகவும் இவ்வாறான அதி சொகுசு மாளிகைகளை கண்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதி சொகுசு வீட்டுத் தளபாடங்கள்இ காற்று சீராக்கிஇ ஜிம் வசதி என பல்வேறு வசதிகளைக் கொண்டமைந்த இந்த கட்டடத்தை எவ்வாறு அழைப்பது என்பது தமக்கு புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவதனால் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் கூட இவ்வாறான அதி சொகுசு கட்டடங்கள் அமைப்பது பொருத்தமுடையதா என்பதனை மீள சந்திக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.