சர்வதேச விசாரணைக்கு போவதைவிட கலப்பு நீதிமன்ற முறைமை சிறந்தது
சர்வதேச விசாரணை என்ற நிலைக்கு போவதைவிட கலப்பு நீதிமன்ற முறைமை சிறந்ததாகும். முழுமையான சர்வதேச தலை யீட்டை தவிர்த்து உள்ளக விசாரணைகளையும் வலியுறுத்தியுள்ளமை வரவேற்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் பிரதி நிதியமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
நாட்டில் நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவது தொடர்பில் பிரதான இரண்டு கட்சிகளும் அக்கறைகாட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கலப்பு நீதிமன்ற முறைமையை எதிர்க்கும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த தரப்பு செயற்பட்டு வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டவுடன் யுத்த இழப்புகள் தொட ர்பில் உண்மையான விசாரணை ஒன்றை ஏற்படுத்த அனைத்து தரப்பும் வலியுறுத்தி நின்றன. குறிப்பாக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது சிவில் அமைப்புகள், சர்வதேச அமைப்புகள் என பல தரப்பினராலும் இந்த அழுத்தம் வழங்கப்பட்டது.
எனினும் மஹிந்த ராஜபக் ஷ இந்த அழுத்தங்களை கவனத்தில் கொள்ளாது தன்னை ஒரு தலை சிறந்த தலைவர் என நிரூபிக்கும் வகையில் பக்கசார்பான வகையிலேயே செயற்பட் டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பக்கசார்பாக நடந்து கொள்ளும் நபர்களுக்கு அப்போது முன்னுரிமை வழங்கப்பட்டதே தவிர நடு நிலையாக செயற்பட்ட எம்மை புறக்கணித்தே செயற்பட்டனர். ஆகவே நாம் முன்வைக்க விரும்பிய கருத்துக்களும் புறக்கணிக்கப்பட்டன என்பதே உண்மை.
யுத்தம் முடிவடைந்தவுடன் மஹிந்தவை புகழ்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்க ஆரம்பித்தவுடன் இலங்கையில் இனவாத கருத்துக்களும் புலிக் கதைகளுமே பலமடைந்தன. குறிப்பாக இறுதி யுத்தத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்படி வலி யுறுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலும் சர்வதேசத் தின் உதவியுடன் இலங்கையில் நடவடிக் கைகளை பலப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்ட போதும் அரசாங்கம் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை. அன்று நாம் எதை யும் கவனத்தில் கொள்ளாது தான்தோன்றித்தனமாக செயற்பட ஆரம்பித்தமை இன்று எமக்கு எதிராக மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் சர்வதேச தரப்பிடம் நாம் கொடுத்த வாக்குறுதிகள், உள்ளக பொறிமுறைகளை பலப்படுத்துவதாக கூறிய வாக் குறுதிகள் என்பன இறுதிவரை முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை இராணுவம் எந்தவித மனித உரிமை மீறல்களையும் மேற் கொள்ளவில்லை என்பது எமக்குத் தெரிந்தாலும் அதை அனைவரும் நம்புவார்கள் என நினைக்க முடியாது. ஆகவே எமது தரப்பு நியாயங்களை உறுதிப்படுத்தவும் எம்மை நிரூபிக்கவும் ஏதாவது ஒரு விசாரணையை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் நாம் எமது உள்ளக பொறிமுறைகளை சிறிதளவேனும் முன்னெடுத்திருந்தால் இன்று எமக்கு எமது இராணுவத்தை நிரூபிக்க அதிகளவு சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கும். அதேபோல் சர்வதேச அழுத்தங்களை சமாளிக்கக்கூடியதாகவும் இருந்திருக்கும். இலங்கையில் ஒரு சர்வதேச விசாரணை நடத்தவோ அல்லது கலப்பு நீதிமன்ற முறைமை பலப்படுத்தவோ தேவை ஏற்பட்டிருக்காது. ஆனால் நேரடியாக சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண் டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து சர்வதேச தரப்பு மாறியுள்ளது. சர்வதேச விசாரணை என்பதை விடவும் கலப்பு நீதிமன்ற விசாரணைகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமாகும்.
இப்போது புதிய ஆட்சியில் நிலைமைகள் முழுமையாக மாற்றம் கண்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயற்பாடுகள் நாட்டை சரியான முறையில் பாதுகாக்கின்றது. இவர்களது செயற்பாடுகள் அனைவரது பாராட்டையும் பெறக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இம்முறை ஜெனிவாவில் நடந்த சம்பவங்கள் அவர்கள் மேற்கொண்ட விதம் என்பவற்றை அனைவரும் அவதானித்தார்கள். ஜனவரியில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம் எம்மையும் எமது நாட்டையும் காப்பாற்றியுள்ளது. ஜனநாயக ரீதியில் ஏற்பட்ட மாற்றங்கள் சர்வதேசத்தின் மீதான நம்பிக்கையையும் பலப்படுத்தியுள்ளது. ஆகவே இப்போது நாம் சர்வதேச அழுத்தங்களைக் கண்டு அஞ்ச வேண்டிய தேவையும் இல்லை.
மிக முக்கியமாக அனைவரும் எதிர்பார்க்கும் காரணிகளில் சர்வதேச விசாரணை என்ற பதம் இப்போது மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற் றும் இடம் பெயர்ந்த வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நீண்டகால சிக்கல் நிலைமை காணப்பட்டது. ஆனால் இப்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆகவே எஞ்சி யிருக்கும் ஒரே பிரதான பிரச்சினையாக இரு ப்பது அரசியல் தீர்வு காண்பதேயாகும். அத ற்கான நடவடிக்கைகளை இரண்டு பிரதான கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. ஆகவே அனைத்து பிரச்சினைகளும் விரை வில் தீர்க்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.