Breaking News

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக்கூடிய சாத்தியம்!



உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமை காரணமாக ஒத்தி வைக்கப்படலாம் என தெரியவருகிறது.

பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் இதுவரையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவில்லை எனவும் அரசியல் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன

அதேவேளை மஹிந்த தரப்பினர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.