மங்கள, ரணிலுக்கு இடையில் முரண்பாடு?
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரின் ஜப்பான் விஜயத்தின் முதல் பாகத்தில், அமைச்சர் மங்கள சமரவீர இணைந்து கொள்ளாமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.ஜனாதிபதியுடன் இணைந்து அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர், வரும் வழியில் பிரித்தானியாவிலேயே தங்கியிருந்து, திங்கட்கிழமையே ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச்சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானில் பிரதமர் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகளில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்கவில்லை. இன்றைய தினம் பிரதமர் நாடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விஜயம் முதலே வெளிவிவகார அமைச்சருக்கும், பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரதமர் மற்றும் ஜனாதிபதி காரியாலய அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து மங்கள சமரவீர அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.