மட்டு.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் . மட்டக்களப்பு மாகாத்மா காந்தி பூங்காவில் இப்போராட்டம் ஆரம்பமானது.
தமக்கான நியமனத்தை வழங்குமாறு கோரியே உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.உதயவேந்தன் தெரிவித்ததர். இம்மாவட்டத்தில் 2011ம் ஆண்டு முதல் பல்கலைகழகங்களிலிருந்து வெளியேறிய சுமார் 1700 வேலையற்ற பட்டதாரிகள் இதுவரை நியமனம் வழங்கப்படாதுள்ளனர்.
நியமனம் உறுதிப்படுத்தப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என வேலையற்ற பட்டதாரிகள் அறிவித்துள்ளனர்.உண்ணாவிரதம் இடம்பெறும் இடத்திற்கு அரசியல் பிரமுகர்களும் விஜயம் செய்தனர். ஏற்கனவே இத்தகைய உண்ணாவிரத போராட்டங்கள் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.