Breaking News

மஹிந்த செய்த தவ­றுக்கு அனை­வரும் விளைவை அனு­ப­விக்­க­ வேண்­டி­யுள்­ள­து - ஜே.வி.பி. குற்றச்சாட்டு

தமிழ் மக்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரத்தை அன்றே மஹிந்த ராஜபக்ஷ வழங்­கி­யி­ருந்தால் இன்று எமக்கு எதி­ரான அழுத்­தங்கள் வந்­தி­ருக்­காது. அன்று மஹிந்த செய்த தவ­றுக்கு இன்று அனை­வரும் விளைவை அனு­ப­விக்­க­வேண்­டி­யுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார். 

வடக்கில் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை உட­ன­டி­யாக தீர்க்க வேண்டும். இனியும் காலம் கடத்­து­வது பிரச்­சி­னை­களை வளர்க்கும் செயற்­பா­டாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார். இலங்­கையில் உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும் எனவும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு ­காண வேண்டும் எனவும் பிரித்­தா­னியா உள்­ளிட்ட நாடுகள் சுட்­டிக்­காட்டி வரு­கின்ற நிலையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர்  இது தொடர்பில் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் நடை­பெற்ற யுத்தம் நாட்டை பாது­காக்கும் நல்­ல­தொரு விட­ய­மாக இருந்­தாலும் யுத்­தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் இரா­ணுவ குற்­றச்­சாட்­டுகள் நடந்­தி­ருக்­கு­மானால் அது போர் தர்­மத்­துக்கு முர­ணான விட­ய­மாகும். அதேபோல் இந்த நாட்டில் பொது மக்கள் அமை­தி­யாக வாழவும் நாட்டின் சூழல் அமை­தி­யாக இருக்­க­வுமே பயங்­க­ர­வாதம் முறி­ய­டிக்­கப்­பட்­டதே தவிர தனிப்­பட்ட யாரையும் மகிழ்ச்­சிப்­ப­டுத்­த­வல்ல. எனினும் இலங்­கையில் யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரே அதி­க­ள­வான அழுத்­தங்கள் பிறப்­பி­க்கப்­ப­ட்டுள்­ளன.

குறிப்­பாக யுத்­தத்தின் பின்னர் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் ஆரா­ய­வேண்டும் என்ற பல­மான அழுத்தம் சர்­வ­தேச தரப்­பினால் முன்­வைக்­கப்­பட்­டது. இன்றும் அது தொடர்ந்­து­ கொண்டு உள்­ளது.

யுத்தம் முடி­வ­டைந்த ஒரு நாட்டின் மீது இவ்­வா­றான அழுத்­தங்கள் கொடுக்­கப்­ப­டு­வது யதா­ர்த்­த­மான ஒன்­றாகும். இவ்­வா­றான செயற்­பா­டுகளைக் கையாள்­வது இலங்­கைக்கு மட்­டு­மல்ல. இதற்கு முன்­னரும் பல நாடு­க­ளுக்கு எதி­ராக மனித உரிமை அமைப்­புகள் இவ்­வா­றான குற்­ற­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளன. அவற்­றுக்கு எதி­ரான விசா­ர­ணை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே இந்த விட­யத்தில் நாம் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை.

எனினும் இவ்­வாறு முன்­வைக்கும் குற்­றச்­சாட்­டு­களை நிவர்த்தி செய்­வது அர­சாங்­கத்தின் முக்­கிய கட­மை­யாகும். எமது இரா­ணு­வத்தின் மீது தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுகளை முன்­வைக்கும் போது ஏதேனும் ஒரு வகையில் அர­சாங்கம் அந்த குற்­றச்­சாட்­டு­களை நிவர்த்­தி­செய்யும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். அதேபோல் குற்­றங்கள் நடந்­தி­ருப்பின் அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டும். இந்த இரண்டும் இல்­லாது மறுப்பு தெரி­விப்­ப­தனால் பிரச்­சி­னைகள் தீரப்­போ­வ­தில்லை.

ஆனால் கடந்த காலங்­களில் மஹிந்த தரப்­பினர் இந்த செயற்­பாட்­டையே மேற்­கொண்­டனர். சர்­வ­தேச தலை­யீடு வேண் டாம் என வலி­யு­றுத்­திய அதேவேளை உள்­ளக பொறி­மு­றை­களை முன்­னெ­டுக்­காது பிரச்­சி­னை­களை வளர்த்­த­னரே தவிர எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முயற்­சிக்­க­வில்லை.

அதேபோல் யுத்­தத்தின் பின்னர் வடக்கு மக்­களின் நிலை­மை­களை கவ­னத்தில் கொள்­ளவும் இல்லை. இன்றும் வடக்கு மக்­களை பயங்­க­ர­வா­திகள் என்ற போர்வையிலேயே மஹிந்த தரப்பு பிர­சார நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அவ்­வாறு இருக்­கையில் எவ்­வாறு நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­படும். யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் நாட்டில் நல்­ல­தொரு அர­சியல் தீர்வைபெறக்­ கூ­டிய வாய்ப்பும் நாட்டில் நல்­லி­ணக்க முறை­மையில் ஆட்­சியை கொண்­டு­செல்­லவும் நல்­ல­தொரு வாய்ப்பு இருந்தும் மஹிந்த தரப்­பினர் அந்த சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்­டனர். மாறாக இன­ரீ­தி­யி­லான அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுத்­தனர்.

யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் மஹிந்த தரப்பு ஆட்சி செய்த ஐந்து ஆண்­டு­க­ளிலும் யுத்த வெற்றி, புலி­களின் பயங்­க­ர­வாதம், புலம்­பெயர் தமிழ் பயங்­க­ர­வா­திகள் தொடர்பில் மட்­டுமே பேசி பிர­சாரம் செய்­த­னரே தவிர நாட்டில் மூவின மக்­களும் ஒன்­றாக வாழக்­கூ­டிய சூழல் தொடர்பில் சிந்­திக்­க­வில்லை. ஆகவே மஹிந்த தரப் பி­னரே நாட்டில் மிகப்­பெ­ரிய தவறை இழைத்­தனர். அதற்­கான விளை­வு­களை இன்று நாம் அனுபவிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

ஆகவே இப் போது நாட்டில் சரியான வகையில் சட் டத்தையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டும். அதற்கான முயற்சிகளை அர சாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதே போல் வடக்கில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும். தொடர்ந்தும் சர்வதேச விசார ணைகள், ஆக்கிரமிப்புகள் என்ற கதைகளை கூறி காலத்தை கடத்துவது அர்த்தமற்ற செயற்பாடாகும் என்றார்.