கிளிநொச்சி, முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசம் இருந்த 576 ஏக்கர் காணிகள் ஒப்படைப்பு
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினuரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த 576 ஏக்கர் தனியார் காணிகள் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் நேற்று நடந்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த காணிகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார். கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட 437 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவில், 137 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசம் உள்ள கேப்பாபிலவு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சுமார் 1400 ஏக்கர் காணிகளை விடுவிக்க இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.