Breaking News

பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சியே பதுங்குகுழி அமைத்தோம் : விளக்குகிறார் மஹிந்த

ஜனா­தி­பதி மாளி­கையில் அமைக்­கப்­பட்­டுள்­ளமை நிலக்கீழ் சொகு­சு­மா­ளி­கை­யல்ல அது பிரபா­கரனின் தாக்­கு­த­லுக்கு அஞ்சி அமைக்­கப்­பட்ட பதுங்­கு­கு­ழி­யாகும்.

 விடு­தலைப் புலிகள் பல­ம­டைந்­தி­ருந்த காலத்தில் எம்மை பாது­காக்­க­வேண்­டிய தேவை இருந்­தது. அன்­றைய கால­கட்­டத்தில் முக்­கியபாது­காப்பு கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் முக்­கிய தீர்­மா­னங்­க­ளையும் நாம் ஜனா­தி­பதி மாளி­கை­யி­லேயே மேற்­கொள் வோம். ஜனா­தி­பதி மாளிகை தாக்­கப்­பட்டால் இந்த பதுங்­கு­கு­ழி­யி­லி­ருந்து செயற்­படும் நோக்­கத்­திற்­கா­கவே இதனை உரு­வாக்­கினோம் என்று முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாளிகையல்ல மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைவார் என்றோ அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சியில் வெற்­றி­பெற்று மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பத­வியை ஏற்­றுக்­கொள்வார் என்றோ நான் நினைத்­துப்­பார்த்­தி­ருக்­க­வில்லை. அனைத்தும் மாயை­யா­கவே நடந்­தே­றி­யது எனவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி மாளி­கையில் இர­க­சிய சொகுசு நிலக்கீழ் மாளிகை ஒன்றை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அமைத்­த­தாக கூறப்­பட்­டு­வரும் நிலையில் அதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். கொழும்பு நரெ­ஹன்­பிட்டி அபே­ய­ராம விகா­ரையில் நேற்று பௌத்த மதத் தலை­வர்­களை சந்­தித்து ஜெனிவா தீர்­மானம் குறித்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கலந்­து­ரை­யா­டினார். அதன் பின்னர் தனது நிலைப்­பாட்டை தெளிவு படுத்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி மாளி­கையில் இர­க­சிய மாளிகை ஒன்றை அமைத்­துள்­ள­தாக தெரி­விக்­கின்­றனர். ஆனால் இது மாளிகை அல்ல. நாம் அமைத்­தது பதுங்­கு­கு­ழி­யே­யாகும். அவ்­வாறு பதுங்­கு­குழி ஒன்றை அமைத்­துள்­ள­தாக தெரி­விப்­பதை நான் மறுக்­க­வில்லை. இது யுத்த கால­கட்­டத்தில் அமைக்­கப்­பட்ட பதுங்­கு­கு­ழி­யாகும். குறிப்­பாக விடு­தலைப் புலி­களின் தரப்பு பல­ம­டைந்து இருந்த கால­கட்­டத்தில் எம்மை பாது­காக்­க­வேண்­டிய தேவை இருந்­தது. அந்த நேரத்தில் முக்­கிய பாது­காப்பு கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் முக்­கிய தீர்­மா­னங்­க­ளையும் நாம் ஜனா­தி­பதி மாளி­கையில் தான் மேற்­கொள்வோம்.

அவ்­வாறு இருக்­கையில் ஜனா­தி­பதி மாளிகை தாக்­கப்­பட்டால் இந்த பதுங்­கு­ழியில் இருந்து செயற்­ப­டலாம் என்ற நோக்­கத்­துக்­கா­கவே இதை உரு­வாக்­கினோம்.உண்­மையில் இந்த பதுங்­கு­கு­ழியை வெளியில் இருந்து பார்க்கும் போது சாதா­ரண வீடு போன்று தெரியும். ஆனால் உள்ளே பாது­காப்­பான வகையில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. யுத்த கால­கட்­டத்தில் இதை நாம் அமைத்தோம். ஏனெனில் அப்­போ­தைய சூழ்­நி­லையில் புலி­களின் தாக்­குதல் மிகவும் கடி­ன­மாக இருந்­தது. விமான தாக்­கு­தல்­களை புலிகள் மேற்­கொண்­டனர். அதில் இருந்து பாது­காத்­துக்­கொள்ள எமக்கு இவ்­வா­றான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்டி இருந்­தது.

எமக்கு மிகப்­பெ­ரிய சவால்

அவர்­களின் விமான தாக்­குதல் மற்றும் நீர்­மூழ்கி கப்பல் தாக்­குதல் என்­பன எமக்கு மிகப்­பெ­ரிய சவா­லாக அமைந்­தது. ஆகவே அவற்றை எதிர்­கொள்ள நாம் தயா­ராக இருந்தோம். ஜனா­தி­பதி மாளி­கையில் மட்­டு­மல்ல அல­ரி­மா­ளி­கை­யிலும் இவ்­வா­றான பதுங்­கு­குழி உள்­ளது. இன்னும் சில முக்­கிய இடங்­க­ளிலும் பதுங்­கு­கு­ழிகள் உள்­ளன. அவற்றை அமைத்­தது தவ­றென குறிப்­பிட முடி­யாது. நாம் தாக்­குதல் நடத்­தும்­போது புலிகள் பதுங்­கு­குழி அமைத்­தனர். அதேபோல் அவர்கள் தாக்கும் போது நாம் பதுங்­கு­குழி அமைத்தோம்.

பிர­பா­க­ரனை எவரும் விமர்­சிக்­க­வில்லை

பிர­பா­க­ரனும் இவ்­வாறு பதுங்­கு­கு­ழி­களை அமைத்து வைத்­தி­ருந்தார். அவ­ரது வீட்டின் அடி­யிலும் இர­க­சிய பதுங்­கு­குழி இருந்­ததே. அதை எவரும் விமர்­சிக்­க­வில்லை. அதே­போல நாமும் எமது பாது­காப்­பிற்­காக பதுங்­கு­கு­ழியை அமைத்­துக்­கொண்டோம். புலிகள் செய்­வது நியா­ய­மெனின் நாம் செய்­வதும் நியா­ய­மா­னதே.

கேள்வி:-ஜெனியா அறிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் உங்­க­ளுக்கு நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் ஏன் நீங்கள் உரை­யாற்­ற­வில்லை?

பதில்: அப்­போது வேறொரு முக்­கிய சந்­திப்பு ஒன்று இருந்­தது. அதனால் பார­ளு­மன்­றத்­திற்கு வர­மு­டி­யாது போய்­விட்­டது. அத்­தோடு எனது நிலைப்­பாட்டை ஆரம்­பத்தில் தெரி­வித்­து­விட்டேன். தொடர்ந்தும் அதைப்­பற்றி பேசு­வதில் அர்த்தம் இல்லை. எனினும் பாரா­ளு­மன்­றத்தில் என்னை அதிகம் விமர்­சிக்­கின்­றனர். அத்­தோடு பாரா­ளு­மன்­றத்தை நகைப்­புக்­குள்­ளாக்கும் திறமை பிர­தமர் ரணி­லுக்கு நன்­றா­கவே உள்­ளது. அதனால் நான் எதையும் பெரி­து­ப­டுத்­த­வில்லை.

கேள்வி :-புதி­தாக தம்மை எதிர்க்­கட்சி என தெரி­விக்கும் உங்­களின் ஆத­ரவு அணியின் தலை­மைத்­து­வத்தை நீங்கள் ஏற்­பீர்­களா?

பதில்: நான் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பினர். எனது கட்­சிக்­கா­கவே நான் செயட்­ப­டு­கின்றேன். ஏனை­ய­வர்கள் எடுக்கும் முடி­வு­க­ளுக்கு நான் பொறுப்­பாக முடி­யாது.

கேள்வி :-ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சில உறுப்­பி­னர்­களும் மஹிந்த அணி­யுடன் இணை­ய­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்: அதைப்­பற்றி எனக்கு தெரி­யாது. சில விட­யங்­களை இர­க­சி­ய­மாக செய்­வார்கள். நடக்கும் வரையில் நாம் அறிந்­தி­ருக்க மாட்டோம். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைவார் என்று எமக்கு தெரி­யுமா? அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சியில் வெற்­றி­பெற்று மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பத­வியை ஏற்­றுக்­கொள்வார் என்று நினைத்­தோமா.? அனைத்தும் நடந்து முடி­வ­டைந்­த­வுடன் தான் எனக்கு தெரி­ய­வந்­தது. இன்றும் அவை மாயை­யா­கவே உள்­ளன. அவ்­வாறே இப்­போது நடக்கும் அனைத்தும் இர­க­சி­ய­மா­ன­வை­யே­யாகும்.

நிலக்­கீழ்­மா­ளிகை

கொழும்பு கோட்­டையில் உள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் நிலக்கீழ் அதி­சொ­குசு மாளிகை அமைக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த வெ ள்ளிக்­கி­ழமை குறிப்­பிட்ட சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் அங்கு அழைத்துச் செல்­லப்­பட்­டி­ருந்­தனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இந்த மாளி­கையை நிர்­மா­ணித்­தி­ருந்தார்.

இந்த மாளி­கையை நிர்­மா­ணிப்­ப­தற்­கான நல்­ல­நே­ரத்­தையும் மஹிந்­தவின் ஆஸ்­தான ஜோதி­ட­ரான சும­ண­தா­சவே குறித்து கொடுத்­தி­ருந்தார்.

மாளி­கையின் உள்ளே நுழை­வ­தற்கு இரகசிய குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளே இருந்து கதவை மூடிக்கொண்டால். வெளியிலிருந்து இரகசிய குறியீட்டின் மூலம் கூட திறக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குளிரூட்டி வசதிகள் தொலைபேசி இன்டர்நெட் , அகலத்திரை தொலைக்காட்சிகள் , சொகுசு இருக்கைகள் , நிலமட்டத்திற்கு மேலே ஜனாதிபதி மாளிகையை முழுவதுமாக கண்காணிப்பதற்கான கமராக்கள் என கற்பனைகூட செய்ய முடியாதளவுக்கு நவீன மற்றும் சொகுசு வசதிகள் இந்த மாளிகைக்குள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.