இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் பிரேரணையை வலுவிழந்ததாக நிறைவேற்றப்படும் சாத்தியம்?
இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட பிரேரணை இன்று வியாழக்கிழமை இந்தியாவின் கரிசனையை கருத்திற்கொண்டு வலுவிழந்த பிரேரணையாக நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நீதிபதிகள் மற்றும் சர்வதேச வழகக்கறிஞர்களின் பங்குபற்றுகை தொடர்பில் எதுவித சரத்துக்களும் உள்ளடக்கப்படாத அமெரிக்க பிரேரணை குறித்து சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கண்டனங்களை தெரிவித்துவருகின்றன.
மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விசாரணையில் அமெரிக்காவின் இந்த செயற்பாடானது கண்துடைப்பாக அமையுமெனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
இறுதி யுத்தத்தின்போது படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்திவரும் சர்வதேச அமைப்புக்கள் அமெரிக்காவின் பிரேரணைக்கு தங்களது எதிர்புக்களை தெரிவித்துவருகின்றன.
இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளை திருப்திப்படுத்தும் முகமாகவும் இந்தியாவின் கோரிக்கைகளை கரிசனை கொண்டும் அமெரிக்க பிரேரணை வலுவிழக்கச் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுமென எதிர்பார்கப்படுகின்றது.