ரஷியாவுக்கு அமெரிக்கா ஆலோசனை ‘சிரியாவில் ஐ.எஸ். மீது தாக்குதல் நடத்துங்கள்!
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போர் நடத்தி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் ஐ.எஸ். தீவிர தாக்குதல் தொடுத்து வருகின்றனர். ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு வலுவூட்டுகிற வகையில், கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் 3 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும் என ரஷியா அறிவித்துள்ளது.
ஆனால் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை விட, சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷியா வான்தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி ஆலோசனை கூறினார். ‘‘இதுதான் தெளிவானது. இதைத்தான் நாங்கள் உணர்த்தி இருக்கிறோம்’’ எனவும் அவர் குறிப்பிட்டார்.