எதிர்பார்த்த நல்லாட்சி நாட்டில் இல்லையாம் :பொன்சேகா
நாட்டில் மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி இன்னும் மலரவில்லை. அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த திசையில் செல்லவேண்டுமானால் மஹிந்தவுடன் ஒட்டியிருந்தவர்கள் தோற்கடிக்கப்படவேண்டும் என்று பீல் மாஷல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயக கட்சி மாவட்ட பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு பீல் மாஷல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.