சேற்றில் சிக்கினார் ஜனாதிபதி
இலங்கையின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழையால், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சேற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது.
நேற்றுமுன்தினம் மாலை களுத்துறையில் உள்ள இலங்கை காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து, இலங்கை ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை வாகனத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்துச் சென்றனர். இதன் பின்னர், சேற்றில் சிக்கிய ஜனாதிபதியின் வாகனத்தை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும், காவல்துறையினர் இணைந்து மீட்டெடுத்தனர்.