Breaking News

இரட்டைக் கொலைச்சம்பவம் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கைது



தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் நேற்று வியாழக்கிழமை இரவு விசாரணைக்காக அழைக்கப்பட்டு,பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2008ம் ஆண்டு ஆரையம்பதியில் இடம் பெற்றதாக கூறப்படும் இரட்டைக் கொலைச்சம்பவம் தொடர்பிலேயே, இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

ஏற்கனனே, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), கொழும்பு குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.