Breaking News

ரோசி சேனாநாயக்க வாக்குகளை மீள எண்ணுமாறு கோரி மனு

முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்க தமது வாக்குகளை மீள எண்ணுமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரோசி சேனாநாயக்க கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தார்.

விருப்பு வாக்குகளை மீள எண்ண வேண்டுமென அவர்கோரிக்கை விடுத்துள்ளார்.ரோசி சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பு வாக்குப் பட்டியலில் 12ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 11 பேர் பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொண்டனர்.11ம் இடத்தை தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட சிலர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதி வழக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது.