Breaking News

35 பேரின் உடல்­நிலை மோசம் உண்ணாவிரதம் தொடர்கிறது

எமக்கு பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­வ­தாக இந்த நாட்டின் தந்­தை­யான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­தி­யோகபூர்­வ­மாக அறி­விப்பைச் செய்யவேண்­டு­மென நாம் கோரி­யுள்ளபோதும் இது­வ­ரையில் எவ்­வி­த­மான உத்­தி­யோக பூர்வ அறி­விப்­பு­களும் கிடைக்­க­வில்­லை­யென உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் தமது விடு­தலை தொடர்­பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் ஆணை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் உட­ன­டி­யாக ஜனா­தி­ப­தியை நேரில் சந்­தித்து வலி­யு­றுத்தி உத்­தி­யோக பூர்­வ­மான முடி­வொன்றை அறி­விக்க வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பு தோல்­வியில் நிறை­வ­டை­யு­மாயின் தமது விடு­தலை வலி­யு­றுத்தும் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­திற்கு ஆத­ர­வாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­று­பட்டு உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பிக்க வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

அதே­வேளை உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி­களில் மேலும் 12பேரின் உடல் நிலை மோச­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் நேற்றைய ­தினம் அனு­ம­தி­கக்ப்­பட்­டுள்­ளனர். அதன்படி கடந்த ஐந்து தினங்­களில் உடல் நிலை மோச­ம­டைந்து வைத்­திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதி­களின் எண்­ணிக்கை 33ஆக உயர்­வ­டைந்­துள்­ளது.

நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­க­ளின்றி நாடா­ள­விய ரீதியில் உள்ள 14 சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் 217பேர் நல்­லாட்சி அர­சாங்கம் தமக்கு பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை அளிக்க வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி கடந்த திங்­கட்­கி­ழமை காலை முதல் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் நேற்று ஐந்­தா­வது நாளா­கவும் தமது உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை தொடர்ந்­தி­ருந்­தனர்.

கைதி­களின் உடல் நிலை மோச­ம­டைந்­தது நேற்றுக் காலை­யிலும் அனைத்து சிறைச்­சா­லை­க­ளிலும் மருத்துவர் அதி­கா­ரி­களால் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதிகள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர்.

இதன்­போது பலரின் நிலை­மை மோச­மை­டந்து வரு­கின்­றமை தொடர்பில் மருத்­துவ அதி­கா­ரி­களால் அறி­வுறுத்­தப்­பட்­டது. அத்­துடன் மகசின் நிறைச்­சா­லையில் 12பேரின் உடல் நிலை மோச­ம­டைந்து நண்­ப­க­ல­ளவில் சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

முன்­ன­தாக நேற்­றி­ரவு மகசின் சிறைச்­சா­லை­யில் உடல் நிலை மோச­ம­டைந்த நிலையில் எண்­மரும் அநு­ரா­த­புர சிறைச்­சா­லையில் ஒரு­வரும் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அதற்கு முன்­ன­தாக 12பேர் குறித்த இரு சிறைச்­சா­லை­க­ளி­லி­ருந்தும் உடல்­நிலை மோச­ம­டைந்து வைத்­திய சாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­ட­தக்­கது.

சிறைச்­சா­லை­க­ளுக்கு மக்கள் பிர­தி­நி­திகள், மத­கு­மார்கள் விஜயம்

அதே­வேளை நேற்­றைய தினமும் மகசின் சிறைச்­சா­லைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தி­த­லை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் விஜயம் செய்து கைதி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினார். அத்­துடன் மன்னார் மாவட்ட குரு­மு­தல்வர் விக்டர் சோசை, அருட்­தந்தை சக்­திவேல், வட்­ரக்க விஜித தேரர் உள்­ளிட்­டோரும் கைதி­களை நேரில் சென்று பார்­வை­யிட்டு அவர்­களின் கோரிக்­கை­க­ளுக்கு தமது முழு­மை­யான ஆத­ர­வையும் வெளியிட்­டனர். மேலும் அவர்களின் விடு­த­லைக்­காக தம்­மா­லான அனைத்து செயற்­பா­டு­களையும் முன்­னெ­டுப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டனர்.

இதே­நேரம் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லைக்கு நண்­ப­க­ல­ளவில் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாள்ஸ் இரு­த­ய­நாதன் மற்றம் சட்­டத்­த­ரணி அன்டன் புனி­த­நா­யகம் ஆகியோர் நேரில் சென்று கைதி­களை பார்­வை­யிட்­டனர். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாள்ஸ் இரு­ந­த­ய­நாதன் கைதிகள் விடு­தலை குறித்து கூட்­ட­மைப்பின் தலை­வ­ரிடம் விரைந்து எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்கை தொடர்பில் வலி­யு­றுத்­து­வ­தாக குறிப்­பிட்டார்.

அர­சியல் கைதி­களின் நிலைப்­பாடு

நேற்றுக் காலையில் நீதி­அ­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்­ஸவை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­தித்த போது நவம்பர் ஏழாம் திக­திக்கு முன்­ன­தாக இவ்­வி­ட­யத்­திற்கு நிரந்­தர தீர்வை வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­ட­போதும் அது தொடர்­பாக உத்­தி­யோக பூர்­வ­மான அறி­வித்­தல்கள் எவை­யுமே எமக்கு விடுக்­கப்­ப­டா­ததன் கார­ண­மாக நாம் தொடர்ந்தும் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எமக்கு ஜனா­தி­ப­தி­யி­டமிருந்து உத்­தி­யோக பதில் கிடைக்கும் வரையில் தொடர்ந்தும் போராட்­டத்தை முன்­னெ­டுப்போம்.

கூட்­ட­மைப்பின் 16பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டமும் கோரிக்கை

எமது விடு­த­லையை வலி­யு­றுத்தி உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பொதுத் தேர்­தலில் வெளிட்ட விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது. அத­னையும் கருத்­திற்­கொண்டே வடக்கு கிழக்கு மக்கள் ஆணைவழங்கியுள்ளனர். அவ்வாறான நிலையில் எமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபாலவை கூட்டமைப்பின் 16பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து சந்தித்து வலியுறுத்தவேண்டும். அதன் மூலம் தீர்க்கமான தீர்மானமொன்றை எடுத்து ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு கூட்டமைப்பின் 16பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியைச் சந்தித்த பின்னரும் கூட இணக்கப்பாடு எட்டப்படாதிருக்குமாயின் அனைவரும் ஒன்றுபட்டு எமது போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தனர்.

இன்று ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.