Breaking News

சர்வதேச யுத்த நீதியை நியாயமாக நிறைவேற்றுவோம்!

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மேற்கொள்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற மறந்துள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றிப்பிட்டுள்ளார்.

இதனால் சர்வதேசத்திற்கு இலங்கையுடன் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

சர்வதேச யுத்த நீதியை நியாயமாக நிறைவேற்றுவதாகவும் யாருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எமது அரசாங்கத்திற்கு எமது பொறிமுறையின் மூலம் பிற நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று செயற்பட முடிந்தமை எமக்குக் கிடைத்த வெற்றி என, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த யோசனைக்கு எதிராக சிலர் பேசுவதாகவும் எவ்வாறு இருப்பினும் முன்னர் இதனை எதிர்த்து வந்த இந்தியா தற்போது ஒத்துழைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.