Breaking News

சமத்துவமான உறவை இலங்கையிடம் வலியுறுத்துகிறது சீனா

சமத்துவமான நடத்தப்படுவதன் மூலமே,  இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங்,

“இலங்கையும் சீனாவும், பாரம்பரியமான நட்புறவைக் கொண்ட நெருங்கிய அயல்நாடுகள்.இருநாடுகளுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் பரஸ்பரம் நன்மையை அடிப்படையாக கொண்டது.

இருநாடுகளுக்கும், மக்களுக்கும் நன்மையளிக்கத்தக்க வகையில், சமத்துவமாக நடத்தப்படுவதன் மூலமே,இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சீனாவின் கடன்கள் தொடர்பான வட்டிவீதத்தைக் குறைக்கவும், முதலீடுகளை மேற்கொண்டு உதவவும் சீனா முன்வர வேண்டும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளது குறித்தே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.