Breaking News

ஐ.நா.வின் முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணை புரியும் - பிரதமர் மோடி

ஐ.நா.வின் அனைத்து முயற்­சி­க­ளுக்கும் உறு­து­ணை­பு­ரிய இந்­தியா எப்­போதும் தயா­ராக உள்­ளது என்று அந்த அமைப்பின் 70 ஆவது ஆண்டு தினத்­தை­யொட்­டிய வாழ்த்துச் செய்­தியில் மோடி குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும், மகாத்மா காந்­தியின் கொள்கை, கோட்­பா­டுகள் இன்­றைய காலத்­துக்கும் பொருத்­த­மா­னவை என்று அவர் தெரி­வித்­துள்ளார்.

உத்­தரப் பிர­தே­சத்தில் மாட்­டி­றைச்சி சாப்­பிட்­ட­தாகக் கூறி முஸ்லிம் ஒருவர் கொல்­லப்­பட்­டமை, ஹரி­யா­னாவில் தலித் குடும்­பத்­துக்கு தீ வைத்­ததில் 2 குழந்­தைகள் பலி­யா­னமை என நாட்டில் சகிப்­புத்­தன்மை குறைந்து, வன்­முறை அதி­க­ரித்து வரும் சூழலில், பிர­தமர் மோடியின் இந்தக் கருத்து கவ­னிக்­கத்­தக்­க­து­என்று இந்­திய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

ஐ.நா. வின் 70ஆவது ஆண்டு தினம் நேற்று கொண்­டா­டப்­ப­டு­வ­தை­யொட்டி,

பிர­தமர் மோடி விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில்,

"மனி­த­நேய சேவை, உலகில் அமை­தியை நிலை­நாட்ட வேண்டும் என்ற இலக்கை அடை­வது உள்­ளிட்ட பணி­களில் 70 ஆண்­டு­களை ஐ.நா. நிறைவு செய்­துள்­ளது. இந்தத் தரு­ணத்தில் அனை­வ­ருக்கும் வாழ்த்­து­களைத் தெரி­விக்­கிறேன்.

மகாத்மா காந்­தியின் கொள்கை, கோட்­பா­டுகள் இன்­றைய கால­கட்­டத்­துக்கும் மிக பொருத்­த­மா­ன­தாக உள்­ளன. அதே­நேரம், ஐ.நா. வின் இலட்­சி­யங்கள், பணி­க­ளுக்கும் காந்­தியின் கோட்­பா­டு­க­ளுக்கும் நெருங்­கிய தொடர்பு உள்­ளது என்­பதை நினை­வு­கூர விரும்­பு­கிறேன். ஐ.நா.வின் பல்­வேறு செயல் திட்­டங்­களை நிறை­வேற்­று­வதில் இந்­தியா முத­லி­டத்தில் உள்­ளது. மேலும் ஐ.நா.வின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணைபுரிய இந்தியா எப்போதும் தயாராக உள்ளது" என்று மோடி மேலும் தெரிவித்துள்ளார்.