மாலைத் தீவின் உப ஜனாதிபதி கைது
அவர் சீனாவில் இருந்து நாடு திரும்பிய போது மாலே சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மாலைத் தீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீனை கொலை செய்ய திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் மாலைத் தீவின் ஜனாதிபதி சென்ற படகில் இடம்பெற்ற விபத்துச்சம்பவம் ஒன்றில் உயிர் தப்பியிருந்தார். இந்த சம்பவத்தில் அவரின் மனைவி காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.