ரணிலும் பாலசிங்கமும் சமாதான வீரர்கள் - விடார் ஹெல்கசன்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் ஆகியோரை சமாதான வீரர்களாகவே தாம் நோக்குவதாக முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கசன் தெரிவித்துள்ளார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிவில் யுத்தத்தை முடிறுத்தல் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, எந்த வகையிலும் சிங்களவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை பரிசாக வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது என இலங்கைக்கான நோர்வே சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் வடக்கிலும் வெளிநாடுகளிலும் தமிழ் மக்கள் பல்வெறு வழிகளில் போராட்டங்களை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்களப் பெரும்பான்மை மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கே வாக்களித்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்குவதில் தெற்கு சிங்கள சமூகத்திற்கு காணப்படும் விருப்பமின்மையே இதற்கான காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.