Breaking News

சிகரட் மற்றும் மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் , பியர் மற்றும் மதுபான வகைகளின் விலை அதிகரிக்கப் பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 

சிகரட் தொடர்பான கலால் வரி அதிக்கபட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி சிகரட் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கபடவுள்ளது.

இதேவேளை 5%க்கு குறைவான அல்கஹோல் கலந்த மதுபானங்களுக்கு கலால் வரி ஒரு லீட்டருக்கு 40 ரூபாவாலும், 5 % க்கு மேல் அல்கஹோல் கலந்த மதுபானங்களுக்கு கலால் வரி ஒரு லிட்டருக்கு 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதே நேரம் வெளிந்நாட்டு மதுபானங்களுக்கான கலால் வரி160 ரூபாவால் அதிகரிக்கபட்டுள்ளதாகவும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.