Breaking News

காதல் பிரச்சனையில் சிக்கிய நடிகை சமந்தா!



பிரபல நடிகை சமந்தா ஒரு சென்னை தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், அடுத்த ஆண்டு அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

இதுபற்றி கேள்விபட்ட சமந்தா அதிர்ச்சியாகி விட்டாராம். அஞ்சான், கத்தி படங்களுக்கு பிறகுதான் இப்போது தான் தமிழ் திரை உலகில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன்.

அதற்குள் இப்படியொரு செய்தியா? என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார், நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், சித்தார்த்துடன் நான் நட்பு வளர்த்து வந்தபோது, அதை காதல் என்று சொன்னார்கள்.
இதுமாதிரி சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு எத்தனையோ காதல், கல்யாண கிசுகிசுக்களை நான் சந்தித்து விட்டேன்.

ஆனால் எந்த கிசுகிசுவும் என்னை பாதித்ததில்லை. பாதிக்கவும் செய்யாது. காரணம் அவை எல்லாம் பொய்யான செய்திகள் என பதில் கூறியுள்ளார் நடிகை சமந்தா.