Breaking News

காவல்துறையினரின் சித்திரவதைகள் தொடர்கின்றன – மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கை காவல்துறையினர் சந்தேக நபா்களை சித்திரவதை செய்வதாக மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் காவல்துறையினர் சந்தேக நபர்கள் கைதிகளை அடிக்கடி சித்திரவதைக்கு உட்படுத்துவதாகவும்இ மோசமாக நடாத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.காவல்துறையினரின் துஸ்பிரயோக சம்பவங்களை கண்காணிப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒப்புதல் வாக்கு மூலங்களை பெற்றுக கொள்வதற்காக காவல்துறையினர் சித்திரவதைகளை வழமையான ஓர் உத்தியாகப் பயன்படுத்தி வருவதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் குறைந்தளவில் பொறுப்பு கூறல்கள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 58 பக்கங்களைக் கொண்ட விசேட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடுமையாக தாக்குதல்இ மின்சாரம் பாய்ச்சுதல்இ பாலுறுப்பு மற்றும் கண்களில் மிளகாய் தூள் தடவுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கைதிகள் துன்பறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்களப் பெரும்பான்மையைச் சேர்ந்தவர்கள் மீதும் காவல் நிலையங்களில் இவ்வாறான சித்திரவதை சம்பவங்கள் பதிவாகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.