சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிக்குகள் உண்ணாவிரதம்!
யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணை களுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிக்குகள் சங்கம் ஒன்று புத்தளத்தில் உணவுத் தவிர்ப்பை ஆரம்பித்துள்ளது.
புத்தளம் - கற்பிட்டி விகாரைக்கு முன்னால் நேற்று முதல் இந்த உண்ணாவிரத போராட்டம் இடம்பெறுகிறது. இதில் ஆறு பிக்குகள் பங்கேற்றுள்ளனர். சர்வதேச நீதிபதிகள் இந்த விசாரணைகளில் இணைத்துக் கொள்ளப்படுவது, இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.