ஆப்கான் மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலுக்கு மன்னிப்பு கோரினார் ஒபாமா
ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது கடந்த வார இறுதியில் அமெரிக்க படையினர் நடத்திய விமான தாக்குதலில் 22 பேர் உயிரிழந்த சம்பவத்திற்காக, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மன்னிப்புக் கோரியுள்ளார்.
மேலும் தாக்குதலில் இறந்து போனவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர் வருங்காலத்தில் இது போன்ற சம்வவங்கள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்ததுவதாகவும் ஒபாமா உறுதி அளித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான அறிக்கையில், இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்ககது