Breaking News

நல்லாட்சியில் ஜப்பானுக்கு பாரிய பொறுப்புள்ளது: ஜப்பான் நாடாளுமன்றில் ரணில்


நல்லாட்சி அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் ஜப்பானுக்கு விசேட பொறுப்புள்ளதென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று (செவ்வாய்க்கிழமை) ஜப்பான் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

நாடு தற்போது மாற்றத்தை நோக்கி முன்னேறிச் செல்வதாக குறிப்பிட்ட அவர், ஜப்பான் நாட்டு முதலீடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இச்சந்தர்ப்பத்தில் இரு நாடுகளின் உறவுகளையும் மென்மேலும் வலுப்படுத்திக்கொள்ள இலங்கை தயாராக உள்ளதெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்வரும் காலத்தில் ஜப்பானின் உதவியுடன் இலங்கையின் அறிவியல் மற்றும் தொழிநுட்ப ரீதியில் பல அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு பிறகு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த விஜயமானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாடாளுமன்றில் உரையாற்றும் மூன்றாவது வெளிநாட்டு தலைவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது