Breaking News

போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்



இலங்கை இரா­ணுவம் போர்க்­குற்­றத்தில் ஈடு­பட்­டது உண்மை என அந்­நாட்டில் உள்­ளக விசா­ரணை குழு­வி­னரே ஏற்­றுக்­கொண்­ட­மையை சுட்­டிக்­காட்­டி­யுள்ள தி.மு.க. தலைவர் கரு­ணா­நிதி, இதனை தொடர்ந்து சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இந்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இலங்­கையில், 2009ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­நாட்டுப் போரின் போது இலங்கைஇரா­ணுவம், போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுகள் உண்­மைதான். இது­கு­றித்த, உள்­நாட்டு விசா­ர­ணையில், வெளி­நாட்டு நீதி­ப­திகள் இடம்­பெற வேண்­டு­மென்ற பரிந்­துரை

ஏற்­கத்­தக்­கதே என்று இலங்கை அரசால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணைக் குழு தெரி­வித்­துள்­ளது.இலங்­கையில் நடை­பெற்ற உள்­நாட்டுப் போரின் இறுதி நாட்­களில் மனித உரிமை மீறல் சம்­ப­வங்­களில் இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­ட­தாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யகம் குற்றம் சாட்­டி­யது.

இது­ தொ­டர்­பாக வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்ட குழு­வி­சா­ரணை நடத்த வேண்­டு­மென, ஐ.நா. ஏற்­க­னவே பரிந்­து­ரைத்த போதிலும், போர்க்­குற்­றங்கள் குறித்து, இலங்கை உள்­நாட்டு குழு விசா­ர­ணைக்கு ஆத­ரவு தெரி­வித்து, கடந்த மாதம் அமெ­ரிக்கா கொண்டு வந்த தீர்­மானம், ஐ.நா. சபையில் நிறை­வே­றி­யது.

இந்­நி­லையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பதவிக் காலத்தில் நிய­மித்த, ஓய்­வு­பெற்ற நீதி­பதி மெக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான விசா­ர­ணைக்­குழு சமர்ப்­பித்­துள்ள 178

பக்க அறிக்­கையில் இறு­திக்­கட்டப் போரில் இரா­ணுவம் போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுகள் நம்­பத்­தக்­கவை.

சரி­யான முறையில் விசா­ரணை நடத்­தப்­பட்டால் இரா­ணுவ வீரர்கள், போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்­டது நிரூ­பணம் ஆகலாம். போர்க்­குற்ற முறைப்­பா­டுகள் குறித்த விசா­ர­ணையில், சர்­வ­தேச நாடு­களின் நீதி­ப­திகள் இடம்­பெற வேண்­டு­மென்ற ஐ.நா.பரிந்­துரை ஏற்­கத்­தக்­கது என்று தெரி­வித்­துள்­ளது.

தற்­போது இலங்கை அர­சினால் நிய­மிக்­கப்­பட்ட குழுவே திட்­ட­வட்­ட­மாக அறிக்கை கொடுத்து, அந்த அறிக்­கையும் இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டு­விட்ட நிலையில்,

இந்­திய அரசு இனியும் இலங்­கையை நட்பு நாடு என்று கூறிக் கொண்­டி­ருக்­காமல், இலங்கைஇரா­ணுவம் நடத்­திய போர்க்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்­ப­டு­கொ­லைகள் குறித்து சர்­வ­தேச நம்­ப­க­மான, சுதந்­தி­ர­மான விசா­ர­ணையை நடத்­து­வ­தற்­கான முயற்­சியை மேற்­கொள்ள வேண்டும்.

அவ் விசா­ர­ணையை இலங்­கை­யிலே நடத்­தாமல், உலக நாடு­களின் பொது­வான இடத்­திலே வைத்து நடத்­தி­னால்தான் உண்மைக் குற்­ற­வா­ளிகள் கண்­ட­றி­யப்­பட்டு அவர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னுடைய நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும். எனவே, இந்திய மத்திய அரசு உடனடியாக அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.