சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ளத் தயார்! அரசாங்கம் அறிவிப்பு
அனைத்து இன மக்களின் மனித உரிமைகளை பாதுகாத்து இணைந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் உட்பட சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள தயாராகவிருப் பதாக ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த அமெரிக்க அனுசரணையில் சமர்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சகாப்தத்தில் மிக முக்கிய நிகழ்வொன்று எமது நாட்டில் நிகழ்ந்தமை உங்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயமாகும். கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்திற்காக அனைத்து மக்களும் வாக்களித்தனர்.
நாட்டில் கடந்த ஒரு தசாப்த காலமாக விதிவிலக்கான காலாசாரம் இருந்ததோடு தனிநபர் உரிமைகள் மீறப்பட்டிருந்தன. மக்கள் புதியதொரு இலங்கையை தேடினார்கள். இன, கலாச்சார மற்றும் மொழி வேறுபாடுகளுக்கு மதிப்பளித்தல், சுயாதீனமான ஜனநாயக நிறுவனங்கள், கருத்து சுதந்திரம்
,சட்டம் ஒழுங்கு, நல்லாட்சி, சகலருக்குமான மனித உரிமைகளையும் மே்படுத்துதல், பாதுகாத்தல், சிவில் மற்றும் அரசியல் அதேபோன்று பொருளாதார, மற்றும் சமூக, கலாசார உரிமைகள் உறுதி செய்யப்பட்டன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் நல்லிணக்கம், அபிவிருத்தி ஆகியவற்றுக்கு அதி முக்கியத்துவமளித்துள்ளது. சர்வதேச சமுத்தின் உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான மற்றும் புதுப்பித்துக்கொள்வதற்கான முயற்கிகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஆவ்வாறான பங்களிப்புக்கள் மற்றும் உறவுகள் ஊடாக எம்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு முழுமையான நன்மையளிப்பதாய் உள்ளது. ஏப்ரல் மாதம் 17ஆம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் நல்லிணக்கத்தின் வெற்றிக்காக அரசியல் மற்றும் கொள்கை ஸ்திரத்தன்மையுடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்தனர்.
நான் பிரதிநிதித்துவப்படுத்தும் வளமான நாட்டை கட்டியெழுப்பவேண்டும். அனைத்து தனிநபர்களினதும் குடிமக்களினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படடுகின்றன. சர்தேசத்தின் உறுப்பு நாடு என்றவகையில் அது பொறுப்பாகும். சுதந்திரத்திற்கான உலகளாவிய மதிப்புக்களுக்கு மதியாதையளித்தல் ஒரு நாட்டின் நம்பிக்கையாகும். ஊலகத்தல் ஒரு நாடு அமைதியை நிலைநாட்டுவதற்கு சமத்துவம் மற்றும் நீதியை பேணவேண்டும்.
அனைத்து தரப்பினருடனும் இணைந்து உண்மைகளை கண்டறிவதற்கான பொறிமுறை, நல்லிணக்கத்தை அடைதல், மனித உரிமைகளை நிலைநிறுத்தல் நீதித்துறை செய்றபாடுகள் தொடர்பாக இலங்கை மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக கடந்த 14ஆம் திகதி இந்த பேரவையில் உரையாற்றி வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்பது தொடர்பாக தௌிவாக குறிப்பிட்ட எமது எழுத்து வடிவ ஆவணத்தை 15ஆம் திகதி சமர்த்திருந்தோம்.
இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கத்தை கருத்தில் கொண்டுள்ள நாம் அதன் பரிந்துரைகளைப் பெற்று அது தொடர்பிலான அதிகாரசபைகளை உள்ளடக்கிய புதிய பொறிமுறையுடாக செயற்பாடுகளை மேற்கொள்ளவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இந்தப் பாதையை தெரிவு செய்துள்ள நாம் அனைத்து மக்களும் சம உரிமையுடன் இணைந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, சகல சர்வதேச தரப்புக்கள், மற்றும் நட்புறவு நாடுகள் , பிரேரணையின் பிரதான அனுசரணை நாடு மற்றும் ஏனைய அனுசாரணை நாடுகள் உட்பட அனைத்து தரப்புக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம். மேலும் இந்த விடயத்தில் சர்வதேச நாடுகளின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் மற்றும் உதவிகள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராகவுள்ளதோடு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் தயாரகவுள்ளோம் என்றார்.