Breaking News

மரண தண்டனை அமுல்படுத்தப்படமாட்டாது : நீதியமைச்சர்

இலங்கை சட்டத்தில் மரணதண்டனை உள்ள போதும், அதனை அமுல்படுத்துவதில்லையென்ற முடிவிலேயே அரசு தொடர்ந்தும் இருப்பதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜெனீவாவில் மரண தண்டனைக்கு எதிராக இடம்பெறும் வாக்கெடுப்பில் மரண தண்டனையை இடைநிறுத்தி வைப்பபதற்கு ஆதரவாகவே இலங்கை வாக்களிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மரண தண்டனையை அமுல்படுத்தக் கோரிய, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.