யாழ் நீதிமன்றத் தாக்குதல் : இருவருக்கு பிணை
யாழ் நீதிமன்றத் தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்து.
இதற்கமைய தலா 5 இலட்சம் பெறுமதியான 5 சரீர பிணையில் இருவரையும் விடுவிப்பதாக யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச்சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது, கடந்த மே மாதம் 20 ஆம் திகதி யாழ் நீதிமன்றம் தாக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினமே 130 பேர் கைது செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் பிணையிலும், குற்றமற்றவர் என்ற ரீதியிலும் விடுதலைச் செய்யப்பட்ட நிலையில், இறுதியாக 20 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 பேரில் இருவருக்கு நீதிமன்றம் இன்று பிணை வழங்க எஞ்சிய 18 பேரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.