ஜெனீவா விவகாரத்தில் சர்வதேசத்திடம் மண்டியிடவில்லை! இலங்கை அரசாங்கம்
ஜெனீவா விவகாரத்தில் சர்வதேசத்திடம் ஸ்ரீலங்கா மண்டியிடவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிடமே அடிபணிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
ஜெனீவா மாநாட்டை அடுத்து சாதகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த காலத்தில் இழக்கப்பட்ட ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மீளப் பெற்றுக்கொள்ளப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை காணாமல்போனார் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க விசேட ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் என்றும் அதற்கேற்ப சட்ட அலுவலகம் ஒன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.