Breaking News

மத்திய வங்கியின் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர்-பிரதமர்

மத்திய வங்கியின் அதிகாரிகளை மாற்றுவதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை எக்காரணத்தைக் கொண்டும் கைவிட மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட்டுவரும் 200 பேரின் இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பா.உ. தினேஷ் குணவர்தனவின் உரைக்கு பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாத தேர்தலின் பின்னர் நானும், மத்திய வங்கியின் ஆளுநரும் நிதிச் சபை உறுப்பினர்களும் சந்தித்துக் கலந்துரையாடினோம். இதன்போது, மத்திய வங்கியின் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்திகாண முடியாமல் இருந்தது. இந்த ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே இடத்தில் ஐந்து வருடங்களுக்கு மேல் சேவை செய்ததனாலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.