Breaking News

நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வடமாகாண சபைக்கு முன்பாக தொண்டர் ஆசியரியர்களினால் கனவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 36 வது அமர்வுகள் இன்று வடக்கு மாகாணசயையில் இடம்பெற்று வரும் நிலையிலேயே, இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தாம் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றி வரும் நிலையில், தமக்கு நிரந்திர நியமனம் வழங்கக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.