Breaking News

மஹிந்த அரசாங்கத்தைத் தோற்கடிக்காமல் இருந்திருக்கலாம் - நிர்மால் ரஞ்சித்



தற்போதைய அரசாங்கத்திலுள்ளவர்களின் சில செயற்பாடுகள் ராஜபக்ஷாக்களுக்கு மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்கின்றது என கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.இந்த அரசாங்கம் ராஜபக்ஷ அரசாங்கத்தை விடவும் மோஷமாக உள்ளதாகவும், இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது ராஜபக்ஷாக்களைத் தோற்கடித்தமை தேவையற்ற ஒன்று என்ற சிந்தனை பிறக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி என்று அடைந்து வரும் நிலையைப் பார்க்கும் போது, 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விடயங்கள் மீண்டும் இடம்பெறுவதற்கு பாரியளவு இடம்பாடுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.