Breaking News

மத அடிப்படைவாதத்திற்கு இடம் தரப் போவதில்லை - அமைச்சர் மனோ

மத்­திய கொழும்பின் பாபர் வீதி என்ற மகா­வித்­தி­யா­லய வீதியின் 36ஆம் தோட்­டத்தில் அமைந்­துள்ள இந்து கோவிலின் பூஜை கள் மற்றும் தேர்த்திரு­விழா எந்த வித தடையும் இன்றி நடை­பெற வேண்டும் என்­பது எனது உறு­தி­யான நிலைப்­பா­டாகும்.

இந்த நாட்டில் இனிமேல் எந்­த­வித அடிப்­ப­டை­வா­தத்­திற்கும் இடம் கொடுக்க முடி­யாது என தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்­சரும், ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வரும், கொழும்பு மாவட்ட எம்­பி­யு­மான மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார். 

கடந்த காலத்தில் பொது­பல சேனா போன்ற அடிப்­ப­டை­வா­திகள் இந்­நாட்டின் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பெரும் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தி, இஸ்­லா­மிய மக்­களின் மத சுதந்­தி­ரத்­துக்கு ஊறு விளை­வித்­ததை இந்­நாடு கண்­டது. அதற்கு எதி­ரான போராட்­டத்தில் நாம் முதன்மை வகித்தோம். இன்று நாங்கள் பாடு­பட்டு பெற்­றுக்­கொ­டுத்­துள்ள சுதந்­தி­ரத்தை தவ­றாக பயன்­ப­டுத்தி இந்­நாட்டு இந்து, இஸ்­லா­மிய, பெளத்த, கத்­தோ­லிக்க மக்கள் மத்­தியில் பதட்­டத்தை ஏற்­ப­டுத்த எவ­ரையும் அனு­ம­திக்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த தோட்­டத்து ஆலய பணி­க­ளுக்கு எவரும் இடை­யூறு விளை­விக்க முடி­யாது. இதற்கு நான் ஒரு­போதும் இடம் கொடுக்க போவ­தில்லை. நான் நேர­டி­யாக இந்த பூஜை நிகழ்­வு­களில் கலந்து கொள்­கின்றேன். இந்த ஆல­யத்­துக்கு பூரண பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­படும் என்றும் மனோ கணேசன் குறிப்­பிட்­டுள்ளார். 

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்­ள­தா­வது;

இன்று தலை­ந­கரில் மத அடிப்­ப­டை­வா­தத்தை முன்­னெ­டுத்து, இந்து கோவில் பணி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்­து­ப­வர்கள், அன்று பொது­பல சேனா முன்­னெ­டுத்த கொள்­கை­க­ளையே, தாம் இன்று முன்­னெ­டுக்­கின்றோம் என்­பதை உணர வேண்டும். அத்­துடன் இது சிங்­கள மக்­களே தேர்­தலில் வாக்­க­ளிக்­காமல் தோல்­வி­யுற செய்த பொது­பல சேனா­வுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் செயல் என்­ப­தையும் உணர வேண்டும். இன்­றைய இந்த அடிப்­ப­டை­வா­தி­களின் செயல்கள், அன்று பொது­பல சேனா­வுக்கு எதி­ராக நேர்­மை­யுடன் போரா­டிய எனது மனதை மிகவும் வருந்த செய்­துள்­ளது என்­ப­தையும் இவர்கள் உணர வேண்டும்.

இந்த விவ­கா­ரத்­திற்கு சமூக மட்­டத்­தி­லேயே தீர்வு காணும் நோக்கம் எனக்கு இருக்­கின்­றது. இந்த கார­ண­மாக இந்த விவ­கா­ரத்தை நான் ஏற்­க­னவே ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோரின் கவ­னங்­க­ளுக்கு கொண்டு வந்­துளேன். அமைச்சர் பைசர் முஸ்­தபா, அமைச்சர் பெளசி, முஜிபூர் ரஹ்மான் எம்பி, மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி, தேசிய நல்லாட்சி இயக்க தலைவர் நாஜா முஹம்மத் ஆகியோருடனும் உரையாடி உள்ளேன். அடிப்படைவாதத்திற்கு இடம் தர போவதில்லை என அவர்கள் எனக்கு உறுதி அளித்துள்ளார்கள்.