Breaking News

மஹிந்த வெற்றியீட்டியிருந்தால் கடாபியின் நிலையே ஏற்பட்டிருக்கும்

மஹிந்­தவின் திட்­டத்தின்படி அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்­சியை மீண்டும் கைப்பற்றி அவ­ரது செயற்பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்தால் லிபி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி கடாபி, ஈராக் நாட்டின் முன்னாள் ஜனா­தி­பதி சதா­ம் ஹூசேன் ஆகிய தலை­வர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்த நிலையே இன்று அவ­ருக்கும் ஏற்­பட்­டி­ருக்கும் என சமூக வலு­வுட்டல் நலன்­புரி அமைச்சர் எஸ்.பி திஸா­நா­யக்க தெரிவித்தார்.

சக்­தி­மிக்­க­தான அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்கி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக முன்­னெ­டுக்க உத்­தே­சித்த பிரச்­ச­னை­களை எதிர்­கொள்­ளவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தா­கவே ஜனா­தி­பதி தேர்தல் ஒன்­றுக்கு அழைப்பு விடுத்­த­தாக எனவும் குறிப்­பிட்டார்.

கொழும்பில் அமைந்­துள்ள ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே சமூக வலு­வுட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சர் எஸ்.பி திஸா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவின் ஆட்­சியின் போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேவையில் இலங்கை தொடர்­பாக முன்­னெக்­கப்­பட்ட விசா­ரனை நட­வ­டிக்­கை­யா­னது மிகவும் வலு­பெற்­றி­ருந்­தது. அவ்­வா­றான நிலை­யி­லேயே மஹிந்த ராஜ­பக்ச தேர்தல் ஒன்­றுக்கு அறி­வித்தல் விடுத்து சக்­தி­மிக்­க­தான அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்கி குறித்த பிரச்சி­னை­களை கையாள திட்­ட­மிட்­டி­ருந்தார்.

மஹிந்­தவின் திட்­டத்தின் படி அன்­றைய செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கும்­பட்­சத்தில் எமது நாடு சர்­வ­தேச ரீதியில் பாரிய பிரச்­ச­னை­களை எதிர்­நோக்க நேரிட்­டி­ருப்­ப­தேர்டு சர்­வ­தேச நாடு­களின் நாட்­பு­ற­வையும் இழந்திருப்போம். மறு­புறம் லிபி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி கடாபி, ஈராக் நாட்டின் முன்னாள் ஜனா­தி­பதி சதா­ம் ஹூசேன் ஆகிய தலை­வர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்த நிலையே இவ­ருக்கும் இன்று ஏற்­பட்­டி­ருக்கும்.

கடந்த வாரங்­களில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை மனித உரிமை உரிமை விவ­காரம் தொடர்பில் அமெரிக்கா உள்­ளிட்ட நான்கு நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரேரணை தொடர்பில் வாத பிர­தி­வா­தங்கள் இடம் பெற்­ற­தோடு கடந்த வியா­ழக்­கி­ழமை முதலாம் திகதி குறித்த பிரேரணையா­னது வாக்­கெ­டுப்­பின்றி ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

இந்த பிர­ரேணை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தமது அதிருப்­தி­யையும் இதனை முழு­மை­யாக ஏற்­று­கொள்ள முடி­யாது என்ற கருத்­தினையும் தெரிவித்திருந்தார்.

அவரின் ஆட்­சி­கா­லத்தில் மனித உரிமை தொடர்பில் வாக்­கு­று­தி­ய­ளித்­த­வற்றை செயற்­ப­டுத்த எமது நாடு தவ­றி­ய­மை­யி­னா­லேயே நாம் சர்­வ­தேச நாடு­களின் அதிருப்­திக்கு ஆளா­ன­தோடு ஜி.எஸ்.பி வரி சலுகை போன்­ற­வற்றை இழக்க நேரிட்­டது. இன்று தேசிய அர­சாங்­கத்தின் கீழ் இவை அனைத்தும் மாற்றம் பெற்று வரு­கின்­றன.

இவ்­வா­றான மாற்றம் ஒன்றை முன்­னெ­டுத்­து­வரும் நிலையில் ஒரு சில தரப்­பினர் ஐக்­கிய நாடு­களின் அறிக்­கையின் பிர­காரம் விசா­ரணை முற்று முழு­வ­து­மாக இரா­ணு­வத்­தி­ன­ரி­டமே முன்­னெ­டுக்­கப்­பட போவ­தாக போலி­யான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதில் எவ்­வித உண்­மையும் இல்லை. காரணம் எமது இரா­ணு­வத்­தி­ன­ரினால் எவ்­வித குற்­றச்­செ­யல்­களும் மேற்கொள்ளப்படவில்லை என்­ப­தனை சர்­வ­தே­சத்­திடம் தெரிவிப்­ப­தற்கு இதுவே எமக்கு கிடைத்த இறுதி வாய்ப்­பாக காணப்­ப­டு­கிறது.

விடு­தலை புலி­க­ளினால் முன்­னெக்­கப்­பட்ட யுத்த குற்­ற­சாட்­டு­களை சர்­வ­தேசம் உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் அறிந்து கொள்­வ­தற்கு இச் சந்­தர்ப்பம் வாய்ப்­பாக அமையும்.

எனவே எதிர்­வரும் காலத்தில் குறித்த பிரே­ர­ணையின் அடி­ப­டையில் யுத்த நட­வ­டிக்­கையின் போது உண்­மையில் நடந்­தது என்ன, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான தீர்வு, குறித்த பிரச்­ச­னைக்­கான நிரந்­தர தீர்வு, சட்டம், நீதி­த்து­றை­களை சுயாதீ­ன­மாக இயங்க வைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை உள்­ளிட்ட நான்கு விட­யங்­களை அடி­ப­டை­யாக கொண்டே எமது செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரிவித்தார்.

சந்­திம வீர­கோடி

குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் பெற்றோலிய மற்றும் பெற்றோலிய அமைச்சர் சந்திம வீரகோடி கருத்து தெரிவிக்கையில்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் ஏகமனதாக நிறைவேற்ற பிரேரனையை நாம் அவர்களுக்கு ஏற்றவாறு நிறைவேற்றப்போவது இல்லை. இது தொடர்பில் எமது சமய தலைவர்கள், அரசியல் வல்லுனர்கள், உள்ளிட்ட அனைவரினது ஆலோசனைக்கமையவே இந்த பிரரேனை நிறைவேற்றப்படும்.இது குறித்து எதிர்வரும் காலத்தில் அனைவரிடமும் ஆலோசனைகளும் திறட்டப்படும் என்றார்.