கோட்டாவைக் கைது செய்யக் கூடாது என வேண்டிய மனு தள்ளுபடி
தான் செய்யாத தவறுக்காக தன்னைக் கைது செய்ய முன்னெடுக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறு வேண்டி முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் முன்வைத்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தள்ளுபடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவரது வேண்டுகொளின்படி இவரை கைது செய்வதைத் தவிர்ந்து கொள்ளுமாறு உயர் நீதிமன்றத்தினால் பொலிஸுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும், இவரினால் முன்வைக்கப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வரையில் இவரைக் கைது செய்யக் கூடாது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீ பவன் மற்றும் பியந்த ஜயவர்தன, உபாலி அபேவர்தன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு நேற்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.